ஆவணி 21, 2022 – கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலய பொதுக்கூட்டம்

இன்று 21/08/2022 ஞாயிறு மாலை 03.30 மணிக்கு பொதுக்கூட்டம் பங்குத்தந்தை தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று முடிவடைந்துள்ளது. ஆலய புதிய நிர்வாக உறுப்பினர்களாக தலைவர் – பங்குத்தந்தை வண. பிதா தயாகரன் அவர்களும் , செயலாளர் – அஞ்சலா (ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்களும், பொருளாளர் – திரு வஸ்தியாம்பிள்ளை அஞ்சலோ அவர்களும், உப செயலாளராக செல்வி . பத்மபிரியாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆலய வழிபாட்டு ஒழுங்களுக்காக திருமதி அனிதா அன்ரனியும் , செல்வி இம்மனுவேல் டிலக்சனாவும் தெரிவாகியுள்ளார்கள். கரம்பொன் புனித செபஸ்தியாரின் ஆசீரவாதங்களுடன் புதிய நிர்வாகம் தனது செயற்பாட்டினை சிறப்பாக மேற்கொள்ள மன்றாடுவோமாக. நன்றி.