மார்கழி 15, 2020 – பங்கின் சிறுவர்களுக்கு நத்தார் பரிசு

கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலய பங்கு மக்களுக்கான சிறு உதவிக்கும் பங்கின் சிறுவர்களுக்கு நத்தார் பரிசு வழங்குவதற்குமென கனடாவில் வாழுகின்ற தூய செபஸ்தியார் ஆலய பங்கு மக்களினூடாக சேர்க்கப்பட்ட ரூபா 100000.00 மும் அஸ்ரேலியாவிலிருந்து திரு. பீற்றர் பெனடிக்ற் அனுப்பிய ரூபா 20,000.00 மும் கிடைக்கப்பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். அன்பளிப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கு எமது நன்றிகளும் எமது ஆலய பங்குமக்கள், பலவகையிலும் உதவிகள் புரிந்தவர்கள், ஆலய வளர்ச்சியில் உறுதுணையாக இருப்பவர்கள் அவைருக்கும் எமது இறையாசீருடன் கூடிய நத்தார் வாழ்த்துக்களை கூறிநிற்கின்றோம்.

கனடாவில் வாழுகின்ற கரம்பொன் தூய செபஸ்தியார் ஆலய பங்கு மக்களினூடாக கிறிஸ்து பிறப்பு விழாவிற்காக சேர்க்கப்பட்ட நிதி