புரட்டாதி 25, 2020 – ஆலய புனரமைப்பு பணிகளுக்கான உதவி

கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலய புனரமைப்பு பணிகளுக்காக புலம்பெயர்ந்து கனடாவில் வாழுகின்ற தூய செபஸ்தியார் ஆலய பங்கு மக்களிடம் கேட்டதற்கு அமைய அவர்களால் சேகரிக்கப்பட்ட நிதியுடன் ஆலய புனரமைப்பு பணிகளை கரம்பொன் ஆலய நிர்வாக சபையினர் மற்றும் ஆலய பங்கு மக்களின் உதவியுடன் ஆரம்பித்திருக்கின்றோம். அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் வாழுகின்ற ஆலய பங்கு மக்களும் எனைய கரம்பொன் வாழ் மக்களும் இம்முயற்சியில் கைகோர்த்து ஆலய புனரமைப்பு பணிகளுக்கு தம்மாலான பூரண ஒத்துழைப்பினை வழங்கி கரம்பொன் தூய செபஸ்தியார் தேவாலயத்தினை புதுப்பொலிவுடன் திகழ உதவிசெய்கிறார்கள்.